நான் 1980ஆம் ஆண்டு முதல் ரயிலில் தான் நான் ஊருக்கு செல்கிறேன். ஆனால் 13 வருஷமாக ரயிலில் செல்லாத கமல், இன்று ரயிலில் செல்வதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர். கருணாநிதி, எம்ஜிஆர் உள்பட பல தலைவர்கள் ரயிலில் சென்றுள்ளனர். கமல் விமானத்தில் மட்டுமே செல்பவர். திடீரென ரயிலில் செல்கிறார். 13 வருஷமாக அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் தெரியாதா? அல்லது ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லையா? என்று டி.ராஜேந்தர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட் பிரச்சனை குறித் செய்தியை இருட்டடிப்பு செய்துவிட்டு கமல் ரயில் போனதை ஊடகங்கள் பெரிதாக்குவதையும் டி.ராஜேந்தர் கண்டித்து பேசினார். மேலும் பா.ஜ.க நம்மைப் பிரித்து ஆள நினைப்பதாகவும், எடப்பாடி அரசு, மோடியின் பினாமி அரசு என்றும், எனவே தனித்தனியாகப் போராடாமல் ஒன்றுசேர்ந்து போராடினால், மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறிய டி.ராஜேந்தர், தி.மு.க சார்பில் நிகழ்த்த உள்ள நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு, எங்கள் கட்சியின் சார்பில் முழு ஆதரவு தருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்