சமூக வலைதளங்களிலும் சரி, செய்தி தளங்களிலும் சரி கடந்த சில தினங்களாக சுவாதியின் கோரமான படுகொலை தான் முக்கியமாக பேசப்படுகிறது.
சமூக வலைதளங்களில் சமூக அக்கறை, பொதுநலம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பது என வாய்கிழிய பேசுபவர்கள் கண் முன்னே வாய்கிழியப்பட்டு இறந்து போன சுவதி படுகொலை போன்ற சம்பவங்கள் நடந்தால் உதவ முன்வருவதில்லை.
காலை 6:30 மணிக்கு அரிவாளால் வெட்டப்பட்ட சுவாதியை மருத்துவமனையில் சேர்க்க 8:30 மணி வரை யாரும் முன்வரவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.