சிலை பதுக்கல் விவகாரத்தில் தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (18:04 IST)
கோடிக்கணக்கான மதிப்புள்ள சுவாமி சிலைகள் பதுக்கல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் தீனதயாளன் பாஸ்போர்டை காவல் துறையினர் முடக்கி உள்ளனர்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சிலைகள் கடத்தி, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பல லட்சம் மிதிப்பு கொண்ட பல சிலைகள் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
 
அப்போது, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கோடிக்கணக்கான மதிப்பு உள்ள இரும்பு மற்றும் கற்களால் உள்ளிட்ட 43 சுவாமி சிலைகளை  போலீசார் பறிமுல் செய்தனர். சிலை கடத்தல் தொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், தலைமறைவான வீட்டின் உரிமையாளர் தீனதயாளனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிவிடாமல் இருக்க தலைமறைவாகியுள்ள தீனதயாளனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 5 வங்கிக்கணக்குகளும், ஹாலாந்தில் உள்ள டச்சு வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்