இதற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத மடையர்கள்: எஸ்வி சேகர் காட்டமான டுவீட்

திங்கள், 28 அக்டோபர் 2019 (17:44 IST)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்ட நிலையில் அந்த சிறுவனை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர் 
 
முதலில் பல்வேறு முயற்சிகள் செய்து அது பலனளிக்காமல் போகவே அதன் பின்னர் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டது. இந்த சுரங்கத்திலிருந்து ஆழ்துளை கிணற்றுக்கு ஒரு பாதை அமைத்து அதன் மூலம் குழந்தையை பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டது 
ஆனால் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட்ட இரண்டு ரிக் இயந்திரங்களும் பழுதானதை அடுத்து போர்வெல் மூலம் குழி தோண்டப்பட்டது. தற்போது இந்த குழி தோண்டப்பட்டு வரும் நிலையில் திடீரென ஆழ்துளை கிணற்றில் மண் சரிந்து குழந்தை மீது சுமார் ஒரு அடி உயரத்துக்கு மண் சரிந்து விழுந்து விட்டதாகவும் அந்த மண்ணை உறிஞ்சி எடுக்க தீவிர முயற்சிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் மீட்பு பணிகளில் தீவிர முயற்சியை சீர்குலைக்கும் வகையில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அவ்வாறு தெரிவித்த ஒருவர் ’10 ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் மீத்தேனை எடுக்க முடிந்த நம்மால் ஒரு சில அடிகள் ஆழத்தில் இருக்கும் குழந்தையை மீட்க முடியவில்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறார்
 
இந்த கேள்விக்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் அளித்துள்ள காட்டமான பதில் இதோ: உள்ள விழுந்ததை சிதையாமல் எடுப்பதும், உள்ளிருந்து வருவதை எடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர், பல் துலக்கும் பேஸ்ட்டை பிதிக்கி வெளியே எடுத்துவிட்டு மீண்டும் உள்ளே போட முடியாமல் பேஸ்டு கம்பெனியும் அரசும் நம்மை ஏமாற்றுவதாக அலறும் மடையர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்