ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (11:31 IST)
கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது என்றும் தீர்ப்பளித்தது
 
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. அப்போது, 'ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர், எம்எல்ஏக்கள் 11 பேர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தர்விட்டர்.  இந்த நோட்டீஸூக்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் உள்பட அனைவரும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்களின் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணை செய்யவுள்ள நிலையில் தற்போது மேலும் 11 எம்.எல்.ஏக்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்