உச்ச நீதிமன்றத்தில் நடிகர் அஜித்தின் வசனத்தை பேசிய நீதிபதிகள்!

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:16 IST)
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து  திறந்து விடாத கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
 

 

இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ”காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகமும் கர்நாடகமும் நல்லுறவை பராமரிக்க வேண்டும், கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும், கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை இருந்தால், 50 டிஎம்சி இல்லை என்றாலும், வாழ்வாதாறத்திற்கு தேவையான நீரையாவது காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசால் எவ்வளவு நீரை தமிழத்திற்கு திறந்து விட முடியும் என்று செப்டம்பர் 5-ந்தேதி அன்று பதிலலிக்க வேண்டும். வாழு வாழ விடு” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடாததால், 40 லட்சத்திற்கும் மேலான தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்