உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

வியாழன், 4 பிப்ரவரி 2016 (22:35 IST)
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி, கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்கள் மீது  லஞ்சப் புகார்களை தமிழக அரசின் அனுமதி இன்றி வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அரசு இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள  அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு தொடர வேண்டும் என்றால், தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது.
 
ஆனால், இதைப் பற்றியும் எல்லாம் கவலைப்படாத தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணையின்படி உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணை செய்ய தலைமைச் செயலாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நடவடிக்கை ஊழலுக்கு துணை போகும் செயலாகும்.
 
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழலுக்கு துணைபோகும் பணியை சில உயர் அதிகாரிகள்தான் செய்து வருகின்றனர்.
 
அவர்கள் மீது ஊழல் வழக்கு தொடுக்க முயன்றால், அதை தடுத்து செயலிழக்கவே தமிழக அரசின் இந்த அரசாணை பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது.
 
எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் ஆகும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்