பொன்முடி மேல்முறையீடு மனு விசாரணை எப்போது? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran

புதன், 17 ஜனவரி 2024 (10:23 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணை என்பது குறித்த முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான வழக்கை ரத்து செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணையின் முடிவடைந்து தீர்ப்பு வெளியான நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பொன்முடி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்  இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
எனவே இம்மாத இறுதியில் பொன்முடி மற்றும் விசாலாட்சி மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்