பெண்களை மட்டும் கேள்வி கேட்காதீர்கள் : மாதர் சங்க தலைவி பேட்டி (வீடியோ)

சனி, 20 அக்டோபர் 2018 (16:10 IST)
மீ டூ இயக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை மிகவும் இழிவாக பார்க்கின்ற சமூகம் குற்றம் அவர்களை மட்டுமே கேள்விகள் கேட்கின்றனர் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி பேட்டியளித்தார். 

 
கரூர் நாரதகானசபா அருகே உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மதவாதம் மற்றும் சவால்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் கரூர், மதுரை புறநகரம், நகரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களை சார்ந்த மாதர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வருகை தந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
 
தற்போது தமிழக அளவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்களது மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் என்று தங்களை பாலியல் சீண்டல் செய்வதாக தைரியமாக வெளியே வந்து சொல்கின்றார்கள். அதற்கு மீ டூ (MEE TOO) இயக்கம் பெரிதும் உதவியாகவும், அதற்கு மிகப்பெரிய வாய்ப்பினை மீ டூ இயக்கம் ஏற்படுத்தி உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பார்க்கின்றது. 
 
ஏனென்றால் நான் (பெண்கள்) பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டவள் என்று வெளியே சொல்வதை அறுவருப்பாகவும், வெட்கப்பட்டு வந்த நிலையிலும், அவர்கள் தயங்கிய நிலையில் அமெரிக்கா தொடங்கி இந்திய முதல் பரவி இருக்கும் இந்த மீ டூ இயக்கமானது பல்வேறு பெண்களை வெளிக்கொணர்ந்து இது எனக்கு அவமானமோ, அசிங்கமோ இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தான் அவமானம், ஆகவே மீ டூ வில் பாதிக்கப்பட்ட பெண்களை மட்டுமே கேள்வி கேட்கின்ற நிலையை தவிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் கேள்விகள் கேட்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை வைத்தார். 
 
பேட்டி : பி.சுகந்தி – மாநில பொதுச்செயலாளர் – அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
 
- சி. ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்