புதுவையில் திடீரென உள்வாங்கிய கடல்.. ‘டானா’ புயல் காரணமா?

Mahendran

புதன், 23 அக்டோபர் 2024 (14:29 IST)
வங்க கடலில் ‘டானா’ புயல் உருவாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திடீரென புதுவையில் கடல் நீர் உள்வாங்கி இருப்பதற்கு ‘டானா’ புயல் காரணமா என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டதை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர். இரண்டு நாட்களில் பச்சை நிறத்தில் மாறிய நிலையில், கடல் அலை வழக்கத்தை விட அதிகமாக நுரை பொங்கிதாவும்,  இதனால் ஜெல்லி மீன்கள், பாம்புகள் சேர்த்து கரை ஒதுங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுவை கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வருவதாகவும், இன்று அல்லது நாளை ஆய்வு முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கடல் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், இன்று திடீரென 30 அடிக்கு கடல் உள்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீலம், பச்சை நிறத்தில் கடல் அலை நிறம் மாறியது, கடல் உள்வாங்கியது ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புயல் உருவாகும் போது ஒரு சில பகுதிகளில் கடல் உள்வாங்கும் என்றும், வங்க கடலில் ‘டானா’ புயல் உருவாகியுள்ளதால் புதுவையில் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்றும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் இடம் என்றும் கூறப்படுகிறது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்