ஜெஜெ உங்க ராஜினாமா கடிதத்தை தயாராக வையுங்க: சுப்பிரமணிய சாமி ட்வீட்

செவ்வாய், 26 மே 2015 (14:30 IST)
சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
 
இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் முடிவுக்காக வருகிற ஜூன் 1 ஆம் தேதி வரை காத்திருக்கப்போவதாகவும், அதன்பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து, தான் முடிவு செய்ய இருப்பதாகவும் நேற்று அவர் தெரிவித்தார்.
 
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது. 
 
சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 
 
"ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை என்.டி.டி.வி. இணையதளத்தில் சீனிவாசன் ஜெயின்  கிழிகிழி என கிழித்துவிட்டார். ஜெஜெ (ஜெயலலிதா) உங்க ராஜினாமா கடிதத்தை தயாராக வையுங்க" என்றும்சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்