பாஜக ஆதரவை பெற சுப்ரமணிய சுவாமியிடம் டீல்?

புதன், 8 பிப்ரவரி 2017 (10:35 IST)
ஓ.பி.எஸ் பேட்டியைத் தொடர்ந்து, பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசியல் சென்று கொண்டிருக்கிறது.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது நாட்டையே உலுக்கியது.
 
இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது. 
 
இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சியை அமைக்க மத்திய அரசின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்காக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியிடம் பேரம் பேச பட்டிருப்பதாகவும்,  அதன் காரணமாகவே, சுப்பிரமணிய சுவாமி சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
 
சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும். தாமதமானால் அது அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அமையும் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்