மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளியில் கல்வி

ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (16:11 IST)
சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல். 

 
நெல்லையில் உள்ள சாஃப்டர் என்ற பள்ளியில் கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 200 பள்ளி கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார்.  
 
இதனைத்தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அப்படி அருகாமையில் பள்ளி இல்லை என்றால் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்