பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது, மாணவனின் உறவினர்கள் கண்மூடித்தணமான தாக்குதல்

ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (12:32 IST)
ஆசிரியர் கண்டித்ததால் மாணவரின் பெற்றோர்கள் அடியாட்களுடன் கண்மூடித்தணமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலக் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் பிரதீப் ரெமோ 5–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதியன்று மாலை பள்ளி முடிந்து வேனில் அழைத்து சென்று வீட்டினுள் விடுவது வழக்கம்.

சம்பவத்தன்று வேன் சென்று கொண்டிருந்த போது பிரதீப் ரெமோ உட்காராமல் நின்றுகொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் மோகன் பிரதீப் ரெமோவிடம் வேனில் உட்கார்ந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார்.

மேலும் அதை மாணவன் கேட்காததால் கண்டித்ததாகவும், இதனால் மாணவனின் பெற்றோர் சிலருடன் வந்து பள்ளியில் ஆசிரியர் பணியிலிருக்கும் போது கண்மூடித்தனமாக தாக்கியதால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் காவல் துறையிடம் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மாணவன் தரப்பில், நான் வேனில் வரும் போது உடற்கல்வி ஆசிரியர் மோகன் அடித்ததால் காது வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பிரதீப் ரெமோ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவத்தை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்