ஆன்லைன் பாடம் புரியாததால் மாணவர் விஷமருந்தி தற்கொலை !

புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:27 IST)
ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்பதற்காக பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சில தளர்வுகள் உள்ளதால் தொழில்துறைகள் அரசின் வழிகாட்டுதலின் படி நடந்து வருகின்றன.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆன்லைன்  வகுப்புகள் புரியாததால்  மனமுடைந்து விஷமருந்தித்  தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவமாக கொரொனாவால்  ஒத்திவைக்கப்பட்ட தேர்வு விரைவில் நடைபெற  உள்ளதால் கோவையைச் சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து தயாராகி வந்தார். இந்நிலையில் இவரது இந்த முடிவு அவரது குடும்பத்தாருக்கு பெரும்  அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்