சென்னை ஐ.ஐ.டி. மாணவி, பேராசிரியர் மனைவி தற்கொலை

வியாழன், 14 ஜூலை 2016 (14:03 IST)
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் தூக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
மகேஷ்வரி என்பவர் மருத்துவ துறையில் பி.எச்.டி முடித்து விட்டு ஒரு வருட பி.டி.எப் படிப்பு படித்து வந்தார். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் ஒருவர் உள்ளார். விடுமுறைக்கு வீட்டுக்கு சென்ற போது கணவர், உனக்கு படிப்பு தான் முக்கியமா? குடும்பத்தை கவனித்துக்கொள், படிப்பு இனி தேவையில்லை என்று கூறியுள்ளார்.
 
இதில் விரத்தி அடைந்த மகேஷ்வரி கல்லூரியிலும் இரண்டு நட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். திடீரென்று நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதேபோல் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரியும் கணேசன் என்பவருக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு இரட்டையர்களாக பிறந்த மகன்கள் உண்டு.
 
அதில் ஒரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் குணமாவததால், குடும்பத்தினர் மனகஷ்டத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்டு வந்த தகராறில் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதற்காக ஐ.ஐ.டி. நிர்வாகம் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து எந்த ஒரு விசாரணைக்கும் ஐ.ஐ.டி. நிர்வாகம், காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

வெப்துனியாவைப் படிக்கவும்