எது தர்மம்? ஆட்சியை கைப்பற்றுவதா?

வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:58 IST)
எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடரும் என்று பேட்டியளித்தார். இதையடுத்து மக்களை துணை சபாநாயகர் தம்பித்துரை தர்மம் என்று கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்தை அடுத்து, சசிகலா குடும்பம் வசம் கட்சி செல்வதை தடுக்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
அதைத்தொடர்ந்து கூவத்தூரில் பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-
 
தர்மம் வென்றுவிட்டது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார். ஜெயலலிதாவின் கனவு நினைவாகும். சசிகலா சோதனைகளை கடந்து வென்று வருவார், என்று கூறியுள்ளார்.
 
ஓ.பி.எஸ். அணிக்கு ஒரு தர்மம்; சசிகலா அணிக்கு ஒரு தர்மம். ஆனால் இவர்களின் ஆட்சியை கைப்பற்றும் சண்டைகளால் தமிழக அரசு இயங்காமல் முடங்கியுள்ளது. இது என்ன தர்மம் என்று தெரியவில்லை. இது இரு அணிகளுக்கும் தர்மமாக தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்