ஜெயலலிதா இல்லாத அமைச்சரவைக் கூட்டம்: ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசணை

புதன், 19 அக்டோபர் 2016 (11:05 IST)
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அறிவுரையின் பேரில் நியமிப்பதாக தமிழக ஆளுநர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்துக்கு நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
 
இந்த அமைச்சரவைக் கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காவிரி விவகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைப்பட்டதற்கு பின்பாக கூட்டப்படும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூட்டப்படும் முதல் கூட்டமாகும்.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்