இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கரூரில் அதிமுக எம்பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியுள்ளார். அம்மா சாவில் மர்மம் இருக்குன்னு சொல்லும் ஸ்டாலின் அண்ணா சாவிலும், ராஜீவ்காந்தி கொலையிலும் திமுக தலைவர் கலைஞருக்கு இருக்கும் தொடர்பு சம்மந்தமான மர்மத்தை விளக்கிவிட்டு அம்மாவின் சாவின் மர்மம் பத்தி கேட்கட்டும் என்றார்.
மேலும் பேசிய தம்பிதுரை இப்போது வந்து ஸ்டாலின் ஜெயலலிதாவின் மர்மத்தை பத்தி பேச காரணம் இந்த ஆட்சியை கவிழ்த்து, தேர்தல் வர வைத்து அவர் போட்டி போடத்தான். எங்கம்மா மரண மர்மத்தை பத்தி பேசும் நீங்கள், உங்க அப்பா இப்போது உள்ள நிலை பற்றிய சொல்ல முடியுமா? என்றார் அதிரடியாக.