ஸ்டாலின் கேவலமான அரசியல் நடத்த வேண்டாம்: பிரேமலதா எச்சரிக்கை

வியாழன், 31 மார்ச் 2016 (15:21 IST)
திண்டுக்கலில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் விளக்க பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் திமுக பொருளாளர் ஸ்டாலின் கேவலமான அரசியல் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 
 
தேமுதிகவிலிருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி, திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் யுவராஜ் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
 
இதனை குறிப்பிட்டு திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தேமுதிகவை சேர்ந்த ஒரு மாவட்டச் செயலரை ஆசை வார்த்தைக் கூறி திமுக பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர் என்றார்.
 
மேலும் தேமுதிகவினரை பலிகடாவாக மாற்றும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. மே 19-ஆம் தேதிக்குப் பின், திமுகவினர் கூண்டோடு தேமுதிக பக்கம் திரும்புவார்கள். அதனால் கேவலமான அரசியல் நடத்த வேண்டாம் என ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார் பிரேமலதா.
 
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால், மக்களுக்கான பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்