சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக 134 தொகுதிகளை பிடித்து மீண்டும் ஆட்சியமைத்தாலும், எதிர்கட்சியான திமுகவை விட மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. சிறய அளவிலான வாக்கு சதவீத வித்தியாசமே இரு கட்சிகளுக்கும் இடையே உள்ளன.
அதன் பலன் தான் இந்த தேர்தலில் எந்த தொகுதியிலுமே திமுக டெபாசிட்டை இழக்கவில்லை என்ற சிறப்பு. 134 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக இரண்டு இடங்களில் டெபாசிட்டை இழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 103 தொகுதிகளிலும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 25 தொகுதிகளிலும், 29 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 27 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 22 தொகுதிகளிலும், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 212 தொகுதிகளிலும், 232 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.