ரூ.72 கோடி மோசடி : எஸ்.ஆர்.எம். பச்சமுத்து திடீர் கைது

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (12:21 IST)
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பச்சமுத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 

 
பாரிவேந்தர் என்றழைக்கப்படுவபர் பச்சமுத்து. வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவான விவகாரத்தில் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கவில்லை என்று நீதிமன்றம் சமீபத்தில் போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.  மேலும் மருத்துவ சீட் தொடர்பாக பலரிடம் அவர் பண மோசடி செய்ததாக புகாரும் எழுந்தது.
 
இதையடுத்து நேற்று பகல் இரவு என பார்க்காமல் சுமார் 14 மணி நேரம் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சென்னையில் இன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லூரி மாணவர்களின் சேர்க்கையில் ரூ.72 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும், பணம் கொடுத்த 108 மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்