முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் ஸ்ரீமதியின் தாயார்: என்ன காரணம்?

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:25 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க இருப்பதாக கள்ளக்குறிச்சியை மாணவி ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஸ்ரீமதி இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இது திட்டமிட்ட கொலை தான். ஆனால் கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன
 
 எனவே ஒரு தாயின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளேன்
 
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி யையும் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். அதுமட்டுமின்றி வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சந்திக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்