உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்பில் எழுத்துப் பிழையால் பரபரப்பு

புதன், 7 செப்டம்பர் 2016 (04:46 IST)
காவிரி நதி நீர் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் திங்களன்று பிறப்பித்த உத்தரவில் முக்கியமான எழுத்துப்பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட்டு உள்ளது.


 

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதே நேரத்தில், இடைக்கால உத்தரவாக, அடுத்த 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால் அந்த உத்தரவில், கர்நாடக அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதற்குப் பதிலாக வெறும் 15 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று இருந்தது.
 
இந்த பிழையை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபாதி சுட்டிக்காட்டியதை அடுத்து அது 15,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்