காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!

Senthil Velan

வியாழன், 26 செப்டம்பர் 2024 (16:52 IST)
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   
 
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.  11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
நாளையுடன் காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. வெறும் 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   

காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அதனை பரிசீலித்து தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
அதன்படி  அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.  


ALSO READ: 'விசாரணையை சந்திக்க தயார்' - முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..! சித்தராமையா திட்டவட்டம்.!!
 
பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்