ஆளுனர் ரவி மீது சந்தேகம்: சபாநாயகர் அப்பாவு

திங்கள், 9 ஜனவரி 2023 (14:24 IST)
ஆளுநர் ரவி உயர் பதவிக்கு ஆசைப்படுகிறாரோ  என்று சந்தேகம் எழுகிறது என சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது 
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ‘ஆளுநர் ரவியின் செயல் வேதனை அளிக்கிறது என்றும்  உரையில் உள்ள பல பகுதிகளை விட்டும், சில  பகுதிகளை சேர்த்தும் அவர் வாசித்து உள்ளார் என்றும் ஆளுநர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று அவர் மீது சந்தேகம் எழுவதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்