சொத்து சரிசமமாக பிரிவதில் தேவராஜுக்கு உடன்பாடு இல்லை. சொத்து முழுவதும் தனக்கேத் தரவேண்டும் எனத் தாய் முத்தம்மாளிடம் கூறியிருக்கிறார். இதனை முத்தம்மாள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் தாயுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. விடாப்பிடியாக முத்தம்மாள் சொத்தை சரிசமமாகதான் பிரித்துக் கொடுப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த தேவராஜ் தனது தாயைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் தனது சகோதரி விஜயம்மாளுடன் கோவூருக்கு சென்று கொண்டிருந்த தாயாரை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் முத்தம்மாளுடன் சேர்ந்து விஜயம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இருவரையும் வெட்டிய தேவராஜன் அங்கிருந்து நேராக தாம்பரம் காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.