சென்னையில் சூரிய கிரகணத்தை எப்போது பார்க்கலா?

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:17 IST)
சென்னையில் சூரிய கிரகணத்தை எப்போது பார்க்கலா?
உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் சென்னையில் சூரிய கிரகணத்தை எப்போது பார்க்கலாம் என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உலக அளவில் இன்று சூரிய கிரகணம் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும். சூரியகிரகணம் ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முழுமையாக தெரியும் 
ஆசியாவின் சில பகுதிகளில் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த நிலையில் சென்னையில் சூரியன் மறையும் போது அதாவது மாலை 5.14 முதல் 5.44 மணி வரை 30 நிமிடங்கள் சூரிய கிரகணம் தென்படும் என்றும் அப்போது 88 சதவீத சூரியன் மறைக்கப்பட்டு இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
இருப்பினும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்க கூடாது என்றும் சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை உடைய சிறப்பு கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்