நள்ளிரவில் மெரீனா சிவாஜி சிலை அகற்றம்: ரசிகர்கள் வருத்தம்

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (00:53 IST)
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 



 
 
இந்த சிலை அந்த பகுதியின் போக்குவரத்துக்கு இடையூறாக ஐருந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று  தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் சிவாஜி  சிலையை அகற்றும்படி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இதையடுத்து சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்பட்டு வரும் சிவாஜி  மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இந்த நிலையில் தற்போது மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் நிலையில் நேற்று நள்ளிரவு மெரினாவில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டது. இதனால் சிவாஜி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்