சிங்கப்பூரில் இருந்து மீம்ஸ் போட்டார்- ஊருக்கு வந்ததும் கைதானார்!

ஞாயிறு, 4 நவம்பர் 2018 (09:59 IST)
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்து மீம்ஸ் போட்ட சிங்கப்பூரில் வேலை செய்துவந்த காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த வீரமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் வெல்டிங் சம்மந்தப்பட்ட வேலை பார்த்து வருகிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்றை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.

பரவலாகப் பகிரப்பட்ட அந்த மீம்ஸ் அமைச்சர் ஜெயக்குமார் பார்வைக்கும் சென்றது. அதையடுத்து ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். போலிஸாரும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். வீரமுத்து சிங்கப்பூரில் இருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அதனால் அவரைப் போலிஸார் தேடப்படும் நபராக அறிவித்தனர்.

இந்நிலையில் ஓரண்டுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை வந்த அவரை விமான நிலையத்திலேயே வைத்து போலிஸார் கைது . அதன் பின் சைதாப்பேட்டை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்