’அதிர்ச்சியில் சிந்து’ : பயிற்சியாளரை மாற்ற துடிக்கும் துணை முதல்வர்

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (10:32 IST)
ரியோ டி ஜெனிரியோவில் இருந்து வந்த சிந்துவுக்கு ஐதராபாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


 


அப்போது, பேசிய சிந்து, ”ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு என் பயிற்சியாளரே  முதல் காரணம்” என கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த், “எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்ற பலரும் சிறப்பாக முன்னேறி வருகிறார்கள். தேவையான சூழலில் சிந்து சரியாக விளையாடினார். இந்தியாவிற்காக அவர் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பயிற்சியாளர் என்கிற ரீதியில் சிந்துவுக்கு நானும் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி குறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த தெலங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி கூறியதாவது, ”கோபி சந்த் சிறப்பான பயிற்சியாளர்தான். ஆனாலும் சிந்துவின் பயிற்சியாளரை மாற்ற இருக்கிறோம். அதனால் அவர் அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் தங்கம் வெல்லுவார்” என்றார்.

அவர் கூறியது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சிந்துவும், துணை முதல்வரின் பேச்சை கேட்டு, அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்திருப்பதாக கூறுகினறனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்