தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தையின் நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:33 IST)
நேற்றைய தீபாவளி விடுமுறை என்பதால் பங்குச்சந்தை விடுமுறை என்றாலும் முகூர்த்த நேரம் என்று ஒரு சில மணி நேரங்கள் மற்றும் பங்குச்சந்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நாளான இன்று பங்கு சந்தை ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் தொடங்கியுள்ளது. சற்றுமுன் சென்செக்ஸ் 20 புள்ளிகள் மட்டும் உயர்ந்த 59 ஆயிரத்து 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி வெறும் 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 17749 என்ற புள்ளிகளை வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தீபாவளிக்கு மறுநாள் இன்று பங்குச் சந்தை வர்த்தகம் மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் பங்கு சந்தை ஏற்றம் காணும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்