ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினரான சங்கர்-கவுசல்யா ஆகியோர் மீது உடுமலையில், மார்ச் 13 ஆம் தேதி ஜாதி வெறிக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த கவுசல்யா சிகிச்சை பெற்று கணவரின் பெற்றோருடன் வீடு திரும்பினார். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.