மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (19:11 IST)
மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியுள்ளார் 
 
இன்று பாராளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மின்சார சட்டத் திருத்த மசோதா மாநில மின் வாரியங்களின் உரிமையை பறிக்கிறது என்றும் அரசின் கொள்கைகளை தனியாருக்கு தாரைவார்க்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் 
 
மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த சட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்