அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்: தீர்ப்பு எப்போது?
புதன், 5 ஜூலை 2023 (11:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதிக்கு அந்த வழக்கு சென்றது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.