செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:41 IST)
செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டிய நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜி, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் எனவே அவரது அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ’செந்தில் பாலாஜி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருப்பதாகவும், அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்
 
இந்த நிலையில் செந்தில்பாலாஜி எங்கேயும் தலைமறைவாக மாட்டார் என்றும் அவர் சென்னையில்தான் இருப்பார் என்று போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மீண்டும் தெரிவித்தார் 
 
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,  இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தார். மேலும் செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி, இருப்பினும் செந்தில் பாலாஜியை நேரில் அழைத்து போலீசார் விசாரணை செய்ய எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்