அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது, இதில் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று ஸ்டாலின் பேசினார், உதயநிதியும் சொன்னார். எங்கள் அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளை அப்புறப்படுத்துவார் என்று கனிமொழி பேசினார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது சமையல் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது," என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, "அமெரிக்கா சென்ற முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். பிறந்தால் கருணாநிதி மகனாகப் பிறக்க வேண்டும். எந்த தியாகமும் செய்யாமல், எந்த உழைப்பும் இல்லாமல் முதலமைச்சர் ஆகிவிடலாம்.
நேற்று வரை திரிஷா, நயன்தாராவுடன் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர், இப்போது அமைச்சர். இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்.
திமுகவில் உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், மூத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள், ஆனால் உதயநிதி ஸ்டாலின் தான் அமைச்சராக உள்ளார். அவர் துணை முதலமைச்சர் ஆகவும் உள்ளார்," என்று செல்லூர் ராஜு கூறினார்.