கே.சி,வீரமணியில் வீட்டில் நகை, அமெரிக்க டாலர் பறிமுதல்

வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:37 IST)
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நகை, பண, பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.சி.வீரமணி. அவர் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை,வேலூர், திருவண்ணாமலை உள்பட அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் அவர் வருமானத்திற்கும் மேல் 654% சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.28.78 கோடிக்கு 654% அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கேசி,வீரமணியில் வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ரூ.34 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் அமெரிக்க டாலர், சுமார் 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி , மற்றும்  ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கே.வி.வீரமணியில் வீட்டில் 275 யூனிட் மணல் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்