பெகாசஸ் தில்லாலங்கடி எனக்கு முன்பே தெரியும்... சீமான்!

புதன், 28 ஜூலை 2021 (09:22 IST)
சீமான் 2019 ஆம் ஆண்டு பயன்படுத்திய செல்போன் எண் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதா தகவல். 

 
பெகாசஸ் என்ற செயலியின் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. 
 
ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட பலரது செல்போன் ஒட்டுக்கேட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 
 
ஆம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2019 ஆம் ஆண்டு பயன்படுத்திய செல்போன் எண் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதா கூறப்படும் பட்டியலில் உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், தான் கண்காணிக்கப்பட்டது முன்பே தெரியும் என்றும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்