கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக என்சிசி பயிற்சியாளர் என்று கூறப்படும் சிவராமன் கைது செய்யப்பட்டார். இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்ற நிலையில் அவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.
தவறு செய்தது தெரிந்ததும் அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள் தான். குற்ற உணர்ச்சி இருந்ததால் தான் தற்கொலை செய்துள்ளார், மகன் செய்த தவறால் அடைந்த வேதனையில் தான் அவருடைய தந்தையும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இருவரது மரணத்திலும் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.