தமிழ் புறக்கணிப்பு- சீமான் கண்டனம்

திங்கள், 22 நவம்பர் 2021 (18:05 IST)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதியதற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைஉப்பாள்ர  சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும். pic.twitter.com/eXQCHw5j0G

— சீமான் (@SeemanOfficial) November 22, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்