பிரசவத்துக்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்: மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

செவ்வாய், 8 ஜூன் 2021 (18:45 IST)
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அவ்வப்போது கத்தரிக்கோலை வயிற்றின் உள்ளே வைத்து அறுவை சிகிச்சை முடிந்துவிடும் சம்பவங்கள் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள திருத்தணியில் பிரசவத்திற்காக வந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது கத்திரிக்கோலை உள்ளே வைத்து தைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இது குறித்து மனித உரிமை ஆணையம் தற்போது தலையிட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை பணிகள் துறை இயக்குனர் பதிலளிக்க வேண்டுமென தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்