பள்ளி மாணவர்களுக்கு போன், பைக் தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திங்கள், 30 மே 2016 (09:44 IST)
மாணவர்கள் மொபைல், பைக்குடன் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறபித்துள்ளது.


 
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் எடுத்து வருவதோ, மோட்டர் வாகனத்தில் வருவதையோ தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனதுடன், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு மோபைல் போன் மற்றும் மோட்டார் வாகனத்தில் வரும் மாணவர்களை பள்ளிக்கு அனுமதிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது.
 
மேலும் 16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் இரு வக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை இதுபோன்ற சட்டத்தை பிறபித்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்