கனமழை எதிரொலி: இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!

திங்கள், 14 நவம்பர் 2022 (07:14 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை இல்லை என்ற என்பதால் பல மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் வட்டம் மாங்காடு உள்பட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்