எஸ்.பி.ஐ தேர்வு தேதியை மாற்ற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!

சனி, 14 ஜனவரி 2023 (20:53 IST)
பொங்கல் தினத்தில் எஸ்பிஐ தேர்வு நடைபெறுவதை அடுத்து இந்த தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்ளேற்பு போராட்டம் நடத்தினார். 
 
ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
எஸ்பிஐ தேர்வு தேதி முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் கடைசி நேரத்தில் தேர்வு தேதியை மாற்ற போராட்டம் செய்தால் அது சாத்தியமில்லை என்றும் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாவட்டத்திலும் எந்தவிதமான கொண்டாட்டமும் இல்லை என்பதால் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்திற்காக தேர்வு தேதியை மாற்ற வழியில்லை என்றும் ஏற்கனவே கூறப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் எஸ்பிஐ தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்