ஜெயிலுக்கு செல்லும் முன் சசிகலா ஒரு விஷயம் செய்ய இருக்கிறார்?

புதன், 15 பிப்ரவரி 2017 (09:11 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. உடனடியாக ஆஜராக சசிகலா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாலும் அவர்கள் இன்னமும் ஆஜராகாமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.


 
 
அவர்கள் கால தாமதம் செய்யும் பட்சத்தில் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நேற்று தீர்ப்பு வந்தது முதல் சசிகலா மிகவும் தளர்ந்து விட்டார். அழுது அழுது அவரது முகம் வீங்கியிருந்தது. தொண்டர்கள் முன் தைரியமாக பேட்டி கொடுத்த போதிலும் உடனடியாக வீட்டினுள் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் இன்று பெங்களூர் செல்லும் முன்னர் சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு சென்று சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்துவிட்டு காரிலேயே நீதிமன்றத்துக்கு செல்வார் என தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்