முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். சசிகலா அந்த கட்சியின் பொதுச்செயலாளரானார். ஆனால் சசிகலா முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் வெளிப்படையாக ஊடகங்களில் கூற ஆரம்பித்தனர்.
இதற்காக நாளை மாலை அவசர அவசரமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை, தமிழக முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. அன்றைய தினமே சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகரிடம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளிக்க உள்ளார்கள் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.