அறை எண் 48-இல் சசிகலா உடனடியாக சரணடைய உத்தரவு: சிறையில் அடைக்க கடும் தீவிரம்!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (13:53 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குற்றாவளிகள் என அறிவிக்கப்பட்ட இவர்கள் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 
 
இதனையடுத்து பெங்களூர் நீதிமன்றத்தின் அறை எண் 48-இல் உடனடியாக சசிகலா உள்ளிட்ட 3 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த அறையின் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூர் காவல்துறையினர் சசிகலாவை கைது செய்து ஆஜர்படுத்து தமிழகம் விரைகிறது.
 
சசிகலா தற்போது கூவத்தூரில் இருப்பதால் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் வழியில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் 80000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் சசிகலா உள்ளிட்ட 3 பேரையும் இன்றே உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் சரணடைய வைக்க வேண்டும் என்பதால் இவர்களை அழைத்து செல்ல எஸ்கார்ட் வாகனம் அல்லது விமானம் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர் காவல்துறையினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்