எனக்கு காய்ச்சல் ; 4 வாரம் டைம் வேணும் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:10 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து, தன்னுடைய உடல்நிலை சரியில்லை, எனவே, நீதிமன்றத்தில் சரணடைய இன்னும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சசிகலா அவகாசம் கேட்டு மனு ஒன்றை விண்ணப்பித்துள்ளார்...


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது...  
 
இந்நிலையில், சசிகலா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அவசரமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் “ தீர்ப்பை ஏற்றுக்  கொள்கிறேன். நான் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதால் சில கட்சிப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், சில மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனு இன்று மாலைக்குள்ளே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...
 

வெப்துனியாவைப் படிக்கவும்