சசிகலா உருவ பொம்மை எரிப்பு: முன்னாள் கவுன்சிலர் ஆவேசம்!

புதன், 8 பிப்ரவரி 2017 (12:58 IST)
இத்தனை நாள் தமிழகத்தில் சசிகலாவுக்கு நிலவி வந்த எதிர்ப்பு தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக ஆரம்பித்து வைத்த இந்த புரட்சி தமிழகம் முழுவதும் பரவும் சூழல் நிலவி வருகிறது.


 
 
சசிகலா முதல்வராவதற்காக தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் என முதல்வர் ஓபிஎஸ் நேற்று கூறியதை அடுத்து தமிழகமே அதிர்ந்தது. ஒட்டுமொத்த மக்களும் பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடியை பாராட்டி வருகின்றனர்.
 
தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவும், சசிகலாவுக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. பல்வேறு நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சசிகலா மீது உள்ள தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க திருப்பத்தூர் முன்னாள் கவுன்சிலர் பூபதி தலைமையில் சசிகலாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இது அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சசிகலா எதிர்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்